2025 ஜூலை 17, வியாழக்கிழமை

கூடைப்பந்தாட்ட, மேசைப்பந்தாட்ட போட்டிகள்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 19 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண  விளையாட்டுத் திணைக்களத்தின் ஆதரவுடன் யாழ்ப்பாண மாவட்ட செயலக விளையாட்டுப் பிரிவு, யாழ். மாவட்ட விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே ஆண்கள், பெண்களுக்கான கூடைப்பந்தாட்ட மற்றும் மேசைப் பந்தாட்டப் போட்டிகளை 21ஆம் 22ஆம் திகதிகளில் நடத்தவுள்ளது. 

ஆண்களுக்கான போட்டிகள் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி கூடைப்பந்தாட்டத் திடலிலும் பெண்களுக்கான போட்டிகள் யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலை கூடைப்பந்தாட்டத் திடலிலும் நடைபெறவுள்ளன. மாவட்ட மட்டத்தில் திறந்த போட்டியாக நடைபெறும் இப்போட்டியில் அதிக எண்ணிக்கையான கழகங்கள் கலந்துகொள்ளலாம் எனவும் தெரியவருகின்றது.

இதேவேளை, ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி உள்ளக விளையாட்டு மைதானத்தில் மேசைப்பந்தாட்டப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியும் திறந்த போட்டியாக மாவட்ட மட்டத்தில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X