2025 ஜூலை 17, வியாழக்கிழமை

வலிகாம பாடசாலைகளுக்கிடையில் கால்பந்தாட்ட போட்டி

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 27 , மு.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

யாழ்ப்பாணம், வலிகாம கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையில் 17 வயதுப் பிரிவினருக்கான கால்பந்தாட்ட காலிறுதிப் போட்டி  வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி மைதானத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

அளவெட்டி அருணோதயாக் கல்லூரிக்கும் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி 12க்கு 00 என்ற கோல் கணக்கில் அளவெட்டி அருணோதயாக் கல்லூரியை வென்றது.

வயாவிளான் மத்திய கல்லூரிக்கும் இணுவில் மத்திய கல்லூரிக்கும் இடையில்  இடம்பெற்ற போட்டியில் வயாவிளான் மத்திய கல்லூரி 01க்கு 00 என்ற கோல் கணக்கில் இணுவில் மத்திய கல்லூரியை வென்றது.

வட்டுக்கோட்டை மத்திய கல்லூரிக்கும் ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயத்திற்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் வட்டுக்கோட்டை மத்திய கல்லூரி 01க்கு 00 என்ற கோல் கணக்கில் ஸ்ரீமுருகன் வித்தியாலயத்தை வென்றது.

தெல்லிப்பளை மகாஜனாக் கல்லூரிக்கும் மானிப்பாய் இந்துக் கல்லூரிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் மானிப்பாய் இந்துக் கல்லூரி 01க்கு 00 என்ற கோல் கணக்கில் மகாஜனாக் கல்லூரியை வென்றது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X