2025 ஜூலை 17, வியாழக்கிழமை

விளையாட்டுத்துறையின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2012 ஜனவரி 27 , மு.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2012ஆம் ஆண்டிற்கான விளையாட்டுத்துறையின் அபிவிருத்தி செயல்த்திட்டம் சம்பந்தமான கலந்துரையாடல் யாழ். மருதனார்மடத்திலுள்ள மாகாண கல்வித்திணைக்கள் மாநாட்டு மண்டபத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வடமாகாண கல்வித் திணைக்களத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சத்தியபாலன் தலைமையில்  இக்கலந்துரையாடல் நடைபெற்றது.

வடமாகாணத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு  ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 12   கல்வி வலயங்களின் உடற்கல்வி உதவிக்கல்விப் பணிப்பாளர்கள், உடற்கல்வி ஆசிரிய ஆலோசகர்கள் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

இதன்போது 2012ஆம் ஆண்டிற்கான உடற்கல்வி சம்பந்தமான செயற்பாடுகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் உள்ளிட்டவை ஆராயப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X