2025 ஜூலை 17, வியாழக்கிழமை

பொங்கல் சைக்கிளோட்டப் போட்டியில் பருவநிலா சம்பியன்

A.P.Mathan   / 2012 ஜனவரி 27 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மகளிருக்கான சைக்கிளோட்டப் போட்டியில் ராசு பருவநிலா சம்பியனானார்.

யாழ். மாநகர சபை ஏற்பாடு செய்திருந்த சைக்கிளோட்டப் போட்டி - துரையப்பா விளையாட்டரங்கிலிருந்து ஆரம்பமானதுடன் போட்டி 25 கிலோமீற்றர் தூரத்தை கொண்டதாக அமைந்திருந்தது.

மகளிருக்காக சைக்கிளோட்டப் போட்டியில் 18 பேர் கலந்துகொண்டதுடன் இவர்கள் அனைவரையும் விஞ்சும் வகையில் முன்னிலை வீராங்கனையான பருவநிலா மிக இலகுவாக வெற்றிபெற்றார்.

தனது வெற்றி தொடர்பில் கருத்து தெரிவித்த பருவநிலா, 'அண்மைக்காலமாக தொடர்ச்சியாக நடைபெற்ற எல்லா சைக்கிளோட்டப் போட்டிகளிலும் வெற்றிபெற்று வருகின்றமை மகிழ்ச்சியை தருகின்றது. இந்த போட்டியில் கலந்துகொள்வதற்கான நிதியுதவி வழங்கிய க்ளோபல் லைஃப் ஸ்டைல் லங்கா நிறுவனத்திற்கு  நன்றிகள்' என தெரிவித்தார்.

'சைக்கிளோட்டப் போட்டிகளில் எனது திறமையை ஊக்குவித்து ரேசிங் சைக்கிளொன்றை வழங்கி, தொடர்ச்சியாக எனக்கு உதவிவரும் அவர்களை இந்நேரத்தில் நினைவு கூறுகின்றேன்' என கூறினார்.

இதேவேளை இவ்வாண்டு நடைபெறவுள்ள தேசிய மட்ட சைக்கிளோட்டப் போட்டிகளில் யாழ். மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி பருவநிலா பங்குபற்றுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக யாழ். மாவட்ட செயலகத்தின் விளையாட்டுப் பிரிவைச் சேர்ந்த ஜி.முகுந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X