Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2012 பெப்ரவரி 07 , மு.ப. 04:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா)
மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரிவில்; உள்ள மீறாவோடை அல் ஹிதாயா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி நேற்று திங்கட்கிழமை வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்றது.
கல்லூரியின் அதிபர் ஐ.எல்.மஹ்ரூப் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டுப் போட்டியில் பிரதம அதிதிகளாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எஸ்.சுபைர் மற்றும் தேசிய கைத்தொழில் அதிகார சபையின் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி ஆகியோர் கலந்து கொண்டதுடன் அதிதிகளாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பணிப்பாளர் யூ.எல்.எம்.ஜெயினுதீன், கோறளைப்பற்று மேற்கு கோட்டக் கல்வி அதிகாரி எம்.சுபைர், ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் கே.பி.எஸ்.ஹமீட் மற்றும் பிரதேச பாடசாலைகளின் அதிபர்களும் கலந்து கொண்டனர்.
விளையாட்டுப் போட்டி நிகழ்ச்சியில் 325 புள்ளிகளைப் பெற்று நஜீமியா இல்லம் (பச்சை) முதலாமிடத்தினையும் 297 புள்ளிகளைப் பெற்ற கமரியா இல்லம் (நீளம்) இரண்டாம் இடத்தினையும் 279 புள்ளிகளைப் பெற்று சம்சியா இல்லம் (சிவப்பு) மூன்றாம் இடத்தினையும் பெற்றுக் கொண்டன.
12 minute ago
44 minute ago
2 hours ago
nauferifana.ajm Tuesday, 07 February 2012 08:57 PM
very well & nice w/c our teem of EVR
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
44 minute ago
2 hours ago