Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
A.P.Mathan / 2012 பெப்ரவரி 12 , மு.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜங் ஸ்ட்ராஸ் விளையாட்டுக்கழகம் வருடந்தோறும் நடாத்தும் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை வவுனியா வைரவர் புளியங்குளம் சிறுவர் பூங்கா மைதானத்தில் நடைபெறவுள்ளன. இன்று மாலை 6 மணிக்கு காற்பந்தாட்ட போட்டியின் இறுதிப் போட்டி நடைபெறும். மின்னொளியில் நடைபெறும் இந்த இறுதிப் போட்டியில் ஈகிள்ஸ்,மருதநிலா ஆகிய அணிகள் மோதவுள்ளன. இந்த இறுதிப் போட்டியை தொடர்ந்து பரிசளிப்பு நிகழ்வுகள் நடைபெறும். அரசியல் பிரமுகர்கள் அடங்கலாக பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்த விளையாடு நிகழ்வுகள் கடந்த டிசெம்பர் மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. நேற்றையதினம் இடம்பெற்ற கடின பந்து கிரிக்கெட் போட்டியில் பொலிஸ், வடதாரகை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டியில் பொலிஸ் அணி வெற்றி பெற்று இருந்தது. இந்த விளையாட்டு நிகழ்வுகளில் மென்பந்து கிரிக்கெட் போட்டிகள், பட்மிண்டன் போட்டிகள் என்பனவையும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. கழகத்தின் 17ஆவது ஆண்டு நிறைவையும், காலஞ்சென்ற சாந்தன் ஜூட் ஆகியோரின் 10ஆவது ஆண்டு நிறைவொட்டியும் இந்த விளையாட்டு நிகழ்வுகள் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
4 minute ago
36 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
36 minute ago
2 hours ago