2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

மண்டூர் திருச்சபை அணி வெற்றி

Super User   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}


 - ஏ.எச்.ஏ.ஹுஸைன்


மட்டக்களப்பு, கோட்டைமுனை மெதடிஸ்த திருச்சபையின் வாலிபன் ஊழியங்களினால் நடத்தப்பட்ட மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் மண்டூர் திருச்சபை அணி வெற்றி பெற்றுள்ளது.

முதன் முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் இலங்கையின் பல பாகங்களிலும் உள்ள மெதடிஸ்த திருச்சபைகளின் அணிகள் பங்குகொண்டன.

மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (06) காலை ஆரம்பமான இந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஞாயிற்றுக்கிழமை (07) மாலை வரை நடைபெற்றது.

திருச்சபையின் வாலிபர்களை ஒன்றிணைத்து அவர்கள் மத்தியில் ஐக்கியத்தை வலுப்படுத்தி திறமைகளை வெளிக்கொணரும் நோக்கில் இந்த சுற்றுப்போட்டி நடத்தப்பட்டது.

சுற்றின் இறுதிப் போட்டியில் சின்ன ஊறணி மெதடிஸ்த திருச்சபை அணியும் மண்டூர் மெதடிஸ்த திருச்சபை அணியும் மோதிக்கொண்டன.

இதன்போது மண்டூர் மெதடிஸ்த திருச்சபை அணி வெற்றிகொண்டு இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பரிசளிப்பு விழா கோட்டைமுனை மெதடிஸ்த திருச்சபையின் சேகர முகாமைக்குரு அடிகளார் ஞானரூபன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாண சபா சங்க தலைவர் அடிகளார். எஸ்.டி.தயாசீலன் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டார்.







You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .