2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

வடமாகாண தடகள விளையாட்டு

Super User   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-    நா.நவரத்தினராசா


மருதனார்மடம் வாழ்வகம் நிறுவனத்தின் நிறுவுனர் கலாநிதி அன்னலட்சுமி சின்னத்தம்பி ஞாபகார்த்தமாக விழிப்புலனற்றோர்களுக்கிடையில் வடமாகாண மட்டத்தில் நடத்தப்பட்ட தடகள விளையாட்டு போட்டிகளில் 303 புள்ளிகள் பெற்று மருதனார்மடம் வாழ்வகம் நிறுவனம் சம்பியனாகியது.

மருதனார்மடம் இராமநாதன் கல்லூரி மைதானத்தில் வாழ்வகத்தின் தலைவர் ஆ.ரவீந்திரன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (07) நடைபெற்றது.

விழிப்புலனற்றோருக்காக முதன்முறையாக இந்த தடகள போட்டிகள் ஒழுங்கு செய்யப்பட்டு நடத்தப்பட்டது.

இந்த தடகள போட்டிகளில், யாழ்ப்பாணம் மருதனார்மடம் வாழ்வகம் நிறுவனம், யாழ்ப்பாணம் விழிப்புலனற்றோர் சங்கம், முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இனிய வாழ்வு இல்லம், வவுனியா கொந்தக்காறன் குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை, வவுனியா ஓகன் நிறுவனம், வன்னி விழிப்புலனற்றோர் சங்கம் ஆகியவற்றின் வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.

இந்த தடகள போட்டிகளில், 303 புள்ளிகள் பெற்ற வாழ்வக நிறுவனம் முதலிடத்தையும், 134 புள்ளிகள் பெற்ற புதுக்குடியிருப்பு இனிய பாரதி இல்லம் இரண்டாமிடத்தையும், 48 புள்ளிகள் பெற்ற யாழ் விழிப்புலனற்றோர் சங்கம் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .