2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

இல்ல விளையாட்டு போட்டி

Super User   / 2014 செப்டெம்பர் 08 , மு.ப. 09:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கடற்கரை வீதியில் இயங்கி வரும் அல் முக்ஸிதுல் ஹகீம் முன்பள்ளியின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (07) மாலை புத்தளம் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் சிறுவர் பூங்காவில் இடம்பெற்றது.

ஐஸ் கிறீம் மற்றும் சொக்கலட் ஆகிய இரண்டு இல்லங்களை சேர்ந்த 22 முன்பள்ளி சிறார்கள் போட்டிகளில் கலந்து கொண்டனர்.

சமநிலை ஓட்டம், 50 மீற்றர் ஓட்டம், நடை போட்டி, டயர் உருட்டுதல், சிரட்டை பொருக்குதல், ஆங்கில எழுத்துக்களை சேகரித்தல், தடை தாண்டி ஓட்டம், குளிர்பானம் அருந்துதல், போத்தலில் மண் நிறைத்தல், பந்து  மாற்றுதல், மலர்களில் தேன் அருந்துதல், சங்கீத கதிரை உள்ளிட்ட பல போட்டிகளும் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் சிறப்பு அதிதியாக புத்தளம் நகர முன்பள்ளிகளின் பொறுப்பாசிரியை குமாரி கணேசன் கலந்து கொண்டார். போட்டிகளுக்கு நடுவர்களாக ஐ.எப்.எம். முன்பள்ளி ஆசிரியை எம்.எஸ்.எப்.ரூசி, பெனாயா முன்பள்ளி ஆசிரியை மின்னொளி மற்றும் ஏ.ஓ.பாத்திமா சஹானா, ஏ.ஓ.சதீலா சலாமத், ஏ.ஓ.பாத்திமா நசீஹா, ஏ.எம்.எப்.ரிஹாசா ஆகியோர் கடமையாற்றினர்.

நடைபெற்ற போட்டிகளில் ஐஸ் கிறீம் இல்லம் 825 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், சொக்கலட் இல்லம் 615 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தையும் பெற்றுக்கொண்டன.

போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கு பெறுமதியான பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.









You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .