2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

கால்பந்து போட்டியில் கைகலப்பு: அணிக்கு தடை

Kogilavani   / 2014 செப்டெம்பர் 09 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

யாழ்ப்பாணம், அராலி பாரதி விளையாட்டுக்கழக மைதானத்தில் வைத்து கடந்த மாதம் 24ஆம் திகதி மத்தியஸ்தர் மற்றும் போட்டி ஏற்பாட்டாளர்களை தாக்கிய, அராலி துனைவி சென்.ஸ்டார் விளையாட்டுக் கழக அணிக்கு ஒரு வருடகால தடை உத்தரவு பிறப்பபிக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக் நிர்வாகம் செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தது.   அத்துடன், 75 ஆயிரம் ரூபாய் தண்டமும் விதிக்கப்பட்டுள்ளதாக லீக் அறிவித்துள்ளது.

லீக் நிர்வாக சபை கூட்டத்தில் மேற்படி தீர்மானங்கள் எடுக்கப்பட்டு, அராலி துனைவி சென்.ஸ்டார் விளையாட்டுக் கழக அணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

'அராலி பாரதி விளையாட்டு கழகம், அணிக்கு 7 பேர் கொண்ட கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டியை தனது விளையாட்டுக்கழக மைதானத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் நடத்தியது.

ஓகஸ்ட் 24 ஆம் திகதி இடம்பெற்ற போட்டியில், அராலி துனைவி சென். ஸ்டார் அணியும் சென்.தோமஸ் அணியும் மோதின.

இதில் சென்.தோமஸ் அணி வெற்றிபெற்றிருந்தது. இந்நிலையில் போட்டி முடிவடைந்ததும், அராலி துனைவி சென் ஸ்டார் அணி வீரர்கள் மத்தியஸ்தரை தாக்கியதுடன், அதனை தடுக்க சென்ற போட்டி ஏற்பாட்டாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து, வட்டுக்கோட்டை பொலிஸார் மைதானத்துக்குள் நுழைந்து நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

இதனைத் தொடர்ந்து போட்டி ஏற்பாட்டாளர்களால், வலிகாமம் கால்ப்பந்தாட்ட லீக்கிற்கு இது தொடர்பிலான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அந்த அறிக்கையின் பிரகாரம் விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டு, தடை மற்றும் தண்டம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .