2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

அட்டாளைச்சேனை எவடொப் கழகம் சம்பியன்

Super User   / 2014 செப்டெம்பர் 10 , மு.ப. 10:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


- ரீ.கே.றஹ்மத்துல்லா


ஒலுவில் லெவன் ஸ்டார் விளையாட்டுக்கழகம் நடாத்திய மின்னொளி மெகா  கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை எவடொப் விளையாட்டுக்கழகம் சம்பியனானது.

இறுதிப் போட்டி ஒலுவில் அல் ஹம்றா விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (09) இரவு நடைபெற்றது.

அணிக்கு 7 பேர் கொண்ட 5 பந்துப்பரிமாற்றங்கள் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிக்கு அம்பாறை மாவட்டத்திலிருந்து முன்னணி வாய்ந்த 64 விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன.

இறுதிப்போட்டிக்கு அட்டாளைச்சேனை தைக்காநகர் எவடொப் அணியினரும், சம்மாந்துறை எஸ்.எஸ்.சி அணியினரும் தெரிவாகினர்.

இறுதிப் பொட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சம்மாந்துறை எஸ்.எஸ்.சி. அணியினர் 5 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 5 இலக்குகளை இழந்து 44 ஓட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எவடொப் அணி 4.4 பந்துப்பரிமாற்றங்கள் முடிவில் 4 இலக்குகளை இழந்து 48 ஓட்டங்களைப் பெற்று வெற்றிபெற்று, லெவன் ஸ்டார் மின்னொளி கிண்ணத்தையும், ரூபாய் 25 ஆயிரம் பணப்பரிசிலையும் தமதாக்கிக் கொண்டனர்.

அம்பாறை மாவட்ட கல்பந்தாட்ட சம்மேளனத்தின் உபதலைவரும், விளையாட்டுக்கழகத்தின் தலைவருமான பொலிஸ் ஸாஜன் எம்.றிபாயுடீன் தலைமையில் நடைபெற்ற இறுதி நிகழ்வுக்கு சுப்பர் டயானா பவர் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஐ.எல்.எம்.மிஜ்வாட் பிரதம அதிதியாகவும், அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எல்.எம்.ஜெமீல் கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .