2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

புதிய கால்பந்தாட்ட தொடரின் முதல் போட்டி

Gavitha   / 2014 செப்டெம்பர் 13 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக்  கழகத்தினால் ஏற்பாடு செய்துள்ள, புதிய கால்ப்பந்தாட்ட தொடரின் முதலாவது ஆட்டத்தில் புத்தளம் யாழ் முஸ்லிம் யுனைட்டட் அணி 02:01 என்ற கோல்கணகக்கில் வெற்றி வாகை சூடிகொண்டது.

இப்போட்டி, புத்தளம் ஸாஹிரா கல்லூரி மைதானத்தில்; வெள்ளிக்கிழமை (12) மாலை நடைபெற்றது.

இப்போட்டியின், முதலாவது ஆட்டத்தில் நியூ பிரண்ட்ஸ் அணியும், யாழ் முஸ்லிம் யுனைட்டட் அணியும் பலப்பரீட்சை நடத்தின. யாழ் முஸ்லிம் யுனைட்டட் அணிக்காக எம்.நிப்ராஸ் மற்றும் எம்.சப்ரின் ஆகியோர் இரு கோல்களை பெற்றுக்கொடுத்தனர் .நியூ பிரண்ட்ஸ் அணிக்காக எம்.சல்மான் ஒரு கோலினை பெற்றார்.

போட்டிக்கு நடுவர்களாக எம்.ஓ.ஜாகீர், எம்.எஸ்.எம்.நௌபி, எஸ்.எம்.சைபுதீன் ஆகியோர் கடமையாற்றினர். 

புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் கழகம் நடாத்தும் இந்த புதிய கால்ப்பந்தாட்ட தொடரானது புள்ளிகள் ரீதியிலான தொடராகும். மொத்தமாக 36 தொடர்கள் இடம்பெறவுள்ளன.

புத்தளம் லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் லிவர்பூல்,விம்பிள்டன்,போல்டன்,த்ரீ ஸ்டார்ஸ்,நியூ ஸ்டார்ஸ்,ட்ரிபல் செவன்,நியூ பிரண்ட்ஸ்,யாழ் முஸ்லிம் யுனைட்டட்,பேர்ள்ஸ் ஆகிய ஒன்பது அணிகள் இத்தொடரில் பங்கேற்கின்றன.

சிறந்த கோல் காப்பாளர், அதி கூடிய கோல்களை செலுத்துபவர், தொடரின் சிறந்த வீரர், சிறந்த இளைய வீரர் ஆகியோருக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்படவுள்ளதாக புத்தளம் கால்ப்பந்தாட்ட லீக் செயலாளரும்,இலங்கை கால்ப்பந்தாட்ட சம்மேளன பொருளாளருமான ஜே.எம்.ஜௌசி தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .