2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Thipaan   / 2014 செப்டெம்பர் 13 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.எஸ்.எம். ஹனீபா


அம்பாறை மாவட்ட பிரதேச செயலக அணிகளுக்கிடையிலான சிநேகபூர்வ மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி பாலமுனை அல் ஹிக்மா வித்யாலய மைதானத்தில் இன்று (13) நடைபெற்றது.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது பிரதேச செயலக அணிகள் இதில் பங்குபற்றின. பிரதேச செயலாளர்களான ஐ. எம். ஹனீபா, ஏ.எல்.எம். சலீம் ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டு போட்டிகளை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தனர்.

10 ஓவர்கள் மட்டுமடுத்தப்பட்ட இப்போட்டியின் இறுதிப் போட்டியில் அட்டாளைச்சேனை மற்றும் சாய்ந்தமருது பிரதேச செயலக அணிகள் மோதின.

இதில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி சம்பியனாகத் தெரிவாகியது.  இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி 10 ஓவர்களை எதிர்கொண்டு 8 விக்கட் இழப்பிற்கு 78 ஒட்டங்களைப் பெற்றனர்.

பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது பிரதேச செயலக அணி 10 ஓவர்களை எதிர்கொண்டு 7 விக்கட் இழப்பிற்கு 39 ஒட்டங்களைப் பெற்றனர்.

39 ஓட்டங்களால் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி வெற்றிபெற்று சம்பியனாகியது.

சுற்றுப்போட்டியில் அட்டாளைச்சேனை பிரதேச செயலக அணி பங்குபற்றிய மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டியதோடு அணித்தலைவர், கணக்காளர் ஏ.எல். நஜிமுதீன் ஹெட்ரிக் சாதனையையும் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 






You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .