2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி சவால் கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Gavitha   / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஐபக்க்ஷவின் தலைமையிலான நீலப்படையணியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட ஜனாதிபதி சவால் கிண்ணத்திக்கான கிரிக்கட் சுற்றுப்போட்டி மட்டக்களப்பு, செங்கலடி மத்திய கல்லூரி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (14)  நடைபெற்றது.

கிழக்கு மாகாண அபிவிருத்தி மன்றம்,  தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் 23ஆவது  இராணுவ படையணியும் இணைந்து நடாத்திய இக் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில், ஏறாவூர்பற்று, ஏறாவூர்நகர் மற்றும் கிரான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 27 அணிகள் பங்குபற்றின.

மட்டுப்படுத்தப்பட்ட ஐந்து ஓவர்கள் கொண்ட இந்த மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியில், ஏறாவூர்பற்று பிரதேசத்தின் லவ் பேட்ஸ் கழகமும் ஏறாவூர் நகர செயலகப்பிரிவில் ஹமட் பரீட் அணியும் கிரான் பிரதேச செயலகப் பிரிவில் ஐங்கரன் கழகமும் செம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டு வெற்றிக்கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.  

இந்நிகழ்வில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர்களான ஏறாவூர் நகரபிதா செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, அருண்தம்பிமுத்து,  இராணுவ பிரிகேடியர் அதுல கொடிபிலி, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாணப்பணிப்பாளர் கே.தவராஜா, மாவட்டப்பணிப்பாளர் எம். எல். என். எம். நைறூஸ் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .