Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2014 செப்டெம்பர் 15 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.தாரணி
- குணசேகரன் சுரேன்
இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தடகள போட்டியில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அணிக்கு ஒரு முதலிடம் 2 இரண்டாமிடங்கள் மற்றும் 4 மூன்றாமிடங்கள் என்பன கிடைத்தன.
14 பல்கலைக்கழகங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குபற்றிய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான விளையாட்டு போட்டியானது இம்மாதம் 6ஆம் மற்றும் 7ஆம் திகதிகளில் மகிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இதில், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் எஸ்.தாரணி 1ஆம் இடத்தை பெற்றார்.
100 மீற்றர் மற்றும் 400 மீற்றர் தடைதாண்டல் ஓட்டங்களில் எஸ்.ஜெயரஞ்சினி 2ஆம் இடத்தையும், உயரம் பாய்தலில் ஜி.துஸ்யந்தி மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டார்.
ஆண்களுக்கான போட்டியில் மூன்று மூன்றாமிடங்கள் கிடைத்தன. ரி.பிரசன்னா தட்டெறிதல் போட்டியிலும், ரி.கபிலன் 110 மீற்றர் தடை தாண்டல் போட்டியிலும், ஏ.ஜே.எட்வின் ஜோசப் 400 மீற்றர் தடைதாண்டல் போட்டியிலும் மூன்றாமிடங்களை பெற்றுக்கொண்டனர்.
யாழ். பல்கலைக்கழக தடகள ஆண்கள் அணியின் முகாமையாளராக ஜி.டி.மதியழகன், பெண்கள் அணியின் முகாமையாளராக திருமதி. ஜெ.சரவணபவஐயர் ஆகியோரும், பயிற்றுனராக செல்வி.இ.அருளம்பலமும் கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எஸ்.ஜெயரஞ்சினி
ஜி.துஸ்யந்தி
ரி.பிரசன்னா
ரி.கபிலன்
ஏ.ஜே.எட்வின் ஜோசப்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago