2025 ஜூலை 09, புதன்கிழமை

கொக்குவில் பிரம்படி அணி சம்பியன்

George   / 2014 ஒக்டோபர் 06 , மு.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ற.றஜீவன்


வறிய மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக 'நாம் நண்பர்கள்' அமைப்பு நடத்திய, அணிக்கு 10 பந்துபரிமாற்றங்கள் கொண்ட மென்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கொக்குவில் பிரம்படி விளையாட்டுக்கழக அணி சம்பியனாகியது.

யாழ். மாவட்டத்தை சேர்ந்த 30 விளையாட்டுக்கழகங்கள் பங்குபற்றிய இந்த சுற்றுப்போட்டியின் போட்டிகள் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை(05) இடம்பெற்ற இறுதிப்போட்டியில் கொக்குவில் பிரம்படி விளையாட்டுக்கழகத்தை எதிர்த்து கரவெட்டி ஞானம்ஸ் அணி மோதியது.

நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஞானம்ஸ் அணி 10 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை இழந்து 58 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கொக்குவில் பிரம்படி அணி 9.3 பந்துபரிமாற்றங்களில் 6 இலக்குகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இறுதிப்போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர், சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் ஆட்டநாயகன் ஆகிய விருதுகளை பிரம்படி அணியின் எல்.ஆதித்தன், இ.தனலக்ஷன் மற்றும் இ.பவிதரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .