2025 நவம்பர் 19, புதன்கிழமை

மேயர் கிண்ணத்தை டொப்பாஸஸ் கழகம் சுவீகரித்தது

Thipaan   / 2014 ஒக்டோபர் 26 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.றம்ஸான்

கல்முனை மாநகரசபை மேயர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பர் மேயராக பதவியேற்று ஒரு வருட பூர்த்திய யொட்டி நடாத்தப்பட்ட 20 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், கல்முனை டொப்பாஸஸ் விளையாட்டுக்கழகம் மேயர் கிண்ணம் – 2014ஐ சுவீகரித்துக் கொண்டது.

கல்முனை சந்தாங்கேணி விளையாட்டு மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை(24)  மாலை சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகத்துக்கும் கல்முனை டொப்பாஸஸ் விளையாட்டுக் கழகத்துக்குமிடையே  இறுதிப் போட்டி இடம்பெற்றது.

இதன்போது முதலில் துடுப்பெடுத்தாடிய கல்முனை டொப்பாஸஸ் விளையாட்டுக்கழகம் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கட்டுக்களை இழந்து 158 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சாய்ந்தமருது இலவன் ஹீரோஸ் விளையாட்டுக் கழகம் 20 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 121 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி 37 ஓட்டங்களால் வெற்றி பெற்ற கல்முனை டொப்பாஸஸ் கழகம் மேயர் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது.

இப்போட்டியின் இறுதி நிகழ்வில் கல்முனை மாநகர மேயர் சட்டமுதுமாணி நிஸாம் காரியப்பர் பிரதம அதிதியாகவும் பிரதி மேயர் ஏ.எம்.அப்துல் மஜீட், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான ஏ.ஏ.பஸீர், ஏ.எம்.றியாஸ், ஏ.எல்.எம்.முஸ்தபா, எம்.எஸ்.உமர் அலி, ஓய்வுபெற்ற கல்வியல் கல்லூரி உடற்கல்வித்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, மேயரின் பிரத்தியேக செயலாளர் ரீ.எல்.எம்.பாறூக் ஆகியோர் அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

கல்முனை மாநகர எல்லைக்குட்பட்ட 16 அணிகள் இச் சுற்றுப் போட்டியில் பங்கேற்றதுடன், இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனாக கல்முனை டொப்பாஸஸ் விளையாட்டுக்கழகத்தைச் சேரந்த அலி நஜாத் தெரிவு செய்யப்பட்டார்.





  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X