2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Thipaan   / 2014 நவம்பர் 04 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.அஷ்ரப்கான்

அகில இலங்கை முஸ்லிம் வாலிபர் சங்கப்பேரவையின் ஏற்பாட்டில், பாணந்துறை எலுவிலை வை.எம்எம்.ஏ. கிளையின் ஆதரவுடன் அணிக்கு 6 பேர் கொண்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி-2014, எதிர்வரும் நவம்பர் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாணந்துறை பொலிஸ் நிலையத்துக்கு அருகிலுள்ள நகர சபை மைதானத்தில் நடைபெற உள்ளதாக பேரவையின் தேசிய பொதுச் செயலாளர் எம்.என்.எம். நபீல், நேற்று(03) தெரிவித்தார்.

சகல வை.எம்எம்.ஏ. கிளைகளுக்கும் மத்தியில் சகோதரத்துவத்தையும் புரிந்துணர்வையும் வளரக்கும் பொருட்டு நடைபெறவுள்ள இச்சுற்றுப்போட்டியில் அகில இலங்கை ரீதியாகவுள்ள சகல வை.எம்.எம்.ஏ கிளைகளும் பங்குபற்ற முடியும்.

அத்துடன் இப்போட்டியில் சம்பியனாக தெரிவாகும் அணிக்கும் இரண்டாம் இடத்தைப் பெறும் அணிக்கும் பெறுமதியான கிண்ணமும் பணப்பரிசும் வழங்கப்படுவதுடன் பங்கு கொள்ளும் சகல அணிகளுக்கும் பெறுமதியான சான்றிதழ்களும் வழங்கப்படும்.

ஒரு கிளையிலிருந்து 2 அணிகள் மாத்திரம் பங்குபற்ற முடியும். இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் நவம்பர் 17ஆம் திகதிக்கு முன்னர் பேரவைக்கு அனுப்பிவைக்குமாறும் பேரவையால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .