2025 நவம்பர் 19, புதன்கிழமை

ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு இடையேயான செயற்பட்டு மகிழ்வோம் போட்டிகள்

Thipaan   / 2014 நவம்பர் 09 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.சசிக்குமார்

திருகோணமலை வலயக் கல்வி திணைக்களம்  ஏற்பாடு செய்த ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கு இடையேயான  செயற்பட்டு மகிழ்வோம் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.

ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலய மைதானத்தில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 10 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள்  பங்கு கொண்டனர்.

இதில்  60 புள்ளிகளைப் பெற்று ஜமாலியா முஸ்லிம் மகா வித்தியாலயம் முதலாம் இடத்தையும் 59 புள்ளிகளைப் பெற்று ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி இரண்டாம் இடத்தையும் 54 புள்ளிகளைப் பெற்ற புனித சூசையப்பர் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.

வலயக்கல்வி பணிப்பாளர் ந.விஜேந்திரன் பங்கு கொண்ட வீரர்களுக்கு வெற்றிக்கிண்ணங்களை வழங்கி வைத்தார்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X