2025 ஜூலை 09, புதன்கிழமை

வீரர்கள் பாராட்டி கௌரவிப்பு

Kogilavani   / 2014 நவம்பர் 10 , மு.ப. 05:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஏற்பாட்டில் அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அகில இலங்கை சம்பியன் பட்டம் பெற்ற கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் வீரர்களை பாராட்டி கௌரவிக்கும் பெருவிழா சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்றது.

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவர் அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எம்.ஜெமீல், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், பிரதேச கல்விப் பணிப்பாளர் ஐ.எல்.ஏ.றஹ்மான், கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையின் அதிபர் பீ.எம்.எம்.பதுறுதீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பயிற்றுவித்த ஆசிரியர் அலியார் பைசர், கிரிக்கெட் துறையின் வர்ணணையாளர் சாக்கிர் கரீம் ஆகியோர் பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .