2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

'க்ரொஸ் வே இன் நோரத்'இல் கொக்குவில் இந்துக் கல்லூரி சம்பியன்

Menaka Mookandi   / 2014 நவம்பர் 11 , பி.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நா.நவரத்தினராசா

மானிப்பாய் ஏஞ்சல் சர்வதேசப் பாடசாலையின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட பாடசாலைகளின் 15 வயதுப்பிரிவு பெண்கள் கூடைப்பந்தாட்ட அணிகளுக்கிடையில் நடத்திய 'க்ரொஸ்வே இன் நோத்' வெற்றிக்கிண்ண கூடைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் கொக்குவில் இந்து கல்லூரி அணி சம்பியனாகியது.

12 பாடசாலைகளின் அணிகள் பங்குபற்றிய இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, மானிப்பாய் சர்வதேச ஏஞ்சல் பாடசாலை கூடைப்பந்தாட்ட திடலில் திங்கட்கிழமை (10) இடம்பெற்றது. இறுதிப்போட்டியில் கொக்குவில் இந்து கல்லூரி அணியை எதிர்த்து உடுவில் மகளிர் கல்லூரி அணி மோதியது.

ஆட்டம் ஆரம்பித்த முதல் நிமிடங்களிலிருந்து உடுவில் மகளிர் கல்லூரி அணி போட்டியில் ஆதிக்கம் செலுத்தியது. அதன் பயனாக அவ்வணி முதல் சுற்றை 15:10 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது.

எனினும் இரண்டாவது பாதியாட்டத்தில் சுதாகரித்துக்கொண்ட கொக்குவில் இந்து கல்லூரி, இரண்டாவது சுற்றை 13:06 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை பெற்றது. விறுவிறுப்படைந்த மூன்றாவது நான்காவது பாதியாட்டங்களில், இரு அணி வீரர்களும் ஆக்ரோசமாக ஆடினார்கள்.

கொக்குவில் இந்து கல்லூரி அணி மூன்றாவது சுற்றை 05:04 என்ற புள்ளிகள் அடிப்படையிலும், நான்காவது சுற்றை 04:02 என்ற புள்ளிகள் அடிப்படையிலும் முன்னிலை பெற்றது.

ஆட்டநிறைவில் கொக்குவில் இந்து கல்லூரி அணி 32:27 புள்ளிகள் அடிப்படையில் உடுவில் மகளிர் கல்லூரி அணியை வென்று சம்பியனாகியது.
சுற்றுப்போட்டியில் தொடர் நாயகனாக உடுவில் மகளிர் கல்லூரியை சேர்ந்த என்.நவரூபினியும், இறுதிப்போட்டியின் நாயகனாக ஏ.தர்சினியும் தெரிவு செய்யப்பட்டனர்.   




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .