2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

தங்கப் பதக்கம் வென்ற ஆசிரியருக்கு கௌரவிப்பு

Kogilavani   / 2014 நவம்பர் 14 , மு.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ஏ.ஜே.எம்.ஹனீபா
 
ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கல்முனை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னாவுக்கு கல்முனை பிரதேச மக்களால் வியாழக்கிழமை(13) வரவேற்பளிக்கப்பட்டது.
 
கல்வி அமைச்சின் ஏற்பாட்டில், நுவரெலியாவில் இடம்பெற்ற ஆசிரியர்களுக்கான தேசிய விளையாட்டுப் போட்டியின் 4ஒ100 மீட்டர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கத்தையும் 4ஒ400 மீட்டர் அஞ்சல் ஓட்டப்போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் இவர் பெற்று கல்முனை மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளார்.
 
இதனையிட்டு பதக்கங்களை வென்ற ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னா பாடசாலை வளாகத்திலிருந்து பிரதான வீதி, ஸாஹிறா வீதி மற்றும் கடற்கரை வீதியாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டதுடன்; கல்முனை ஸாஹிறாக் கல்லூரியின் அதிபர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் அவருக்கு வரவேற்பளித்தனர்.
 
இதனைத் தொடர்ந்து இவருக்கான கௌரவிப்பு நிகழ்வு அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் யூ.எல்.எம்.அமீன் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்வி பணிமனையின் உடற்கல்விப் பிரதிப் பணிப்பாளர் எம்.எம்.சத்தர், ஓய்வுபெற்ற சிரேஷ;ட விரிவுரையாளர் எம்.ஐ.எம்.முஸ்தபா, பிரதி அதிபர் எம்.ஐ.எம்.அன்சார் உள்ளிட்ட ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
 
இதன்போது பதக்கம் வென்ற உடற்கல்வி ஆசிரியர் ஐ.எல்.எம்.ஜின்னாவுக்கு பாடசாலை சமூகம், அபிவிருத்திக் குழு, பழைய மாணவர் சங்கம் என்பன பொன்னாடை போர்த்தி கௌரவித்தனர்.



You May Also Like

  Comments - 0

  • mansoor a. cader Friday, 14 November 2014 10:44 AM

    வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .