2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஐந்து பதக்கங்களை பெற்று அட்டாளைச்சேனை ஆசிரியர் சாதனை

Gavitha   / 2014 நவம்பர் 15 , மு.ப. 06:12 - 0     - {{hitsCtrl.values.hits}}


-ரீ.கே.றஹ்மத்துல்லா


அகில இலங்கை ரீதியில் ஆசிரியர் மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் அட்டாளைச்சேனையை சேர்ந்த எம்.முஹம்மட் அஸ்மி ஆசிரியர் 02 தங்கப் பதக்கங்களையும் 02 வெள்ளிப் பதக்கங்களையும் 01 வெண்கலப்பதக்கமான மொத்தம் 05 பதக்கங்கள் பெற்று, கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இவ்விளையாட்டுப் போட்டி இம்மாதம் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் நுவெரலியா நகரசபை மைதானத்தில் நடைபெற்றது.

இவர் 100மீற்றர், 4*400மீற்றர் போட்டிகளில் தங்கப்பதக்கத்தையும்  200மீற்றர், 4ழ*100மீற்றர் போட்டிகளில் வெள்ளிப்பதக்கத்தையும் 400மீற்றர் போட்டியில் வெண்கலப்பதக்கத்தையும் பெற்று, கிழக்கு மாகாணத்தில் அதிகூடிய பதக்கங்களைப் பெற்றவர் என்ற சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

தற்போது பொத்துவில் மத்திய கல்லூரியின் உடற்கல்வி பொறுப்பாசிரியராக கடைமையாற்றும் இவர் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலை மற்றும் அட்டாளைச்சேனை தேசிய கல்விக் கல்லூரி என்பவற்றின் பழைய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .