2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

கலைப்பீடம் முதலிடம்

Gavitha   / 2014 டிசெம்பர் 15 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சொர்ணகுமார் சொரூபன்

யாழ்ப்பாண பல்கலைக்கழக புதுமுக மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற விளையாட்டுப்போட்டியில் கலைப்பீடம் 307 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டது.

இந்த விளையாட்டு போட்டி கடந்த சனிக்கிழமை(13) யாழ். பல்கலைக்கழகத்தில், ஆரம்பமாகியதுடன் ஞாயிற்றுக்கிழமை (14) இறுதி சுற்றுக்கள் இடம்பெற்றன.

கலைப்பீடம், விஞ்ஞானபீடம், முகாமைத்துவ வணிகபீடம் மற்றும் மருத்துவபீடம் ஆகிய பீடங்களை சேர்ந்த மாணவர்கள் இந்த போட்டியில் பங்குபற்றினார்கள்.

கலைப்பீட மாணவர்களின் ஆதிக்கம் நிலைபெற்றாலும், கடந்த வருட சம்பியனான முகாமைத்துவ வணிகபீடம் கடும் சவாலை ஆரம்பம் முதல் மைதானத்தில் வெளிப்படுத்தியது. எனினும் இறுதியில் 307 புள்ளிகளை பெற்று கலைப்பீடம் சம்பியனாகியதுடன், இரண்டாமிடத்தை 273 புள்ளிகள் பெற்று முகாமைத்துவ வணிக பீடமும், மூன்றாமிடத்தை 134 புள்ளிகள் பெற்ற விஞ்ஞான பீடமும் பெற்றுக்கொண்டன.

ஓட்டப்போட்டிகளில், சிறந்த வீரனாக 100 மீற்றர் ஓட்டத்தூரத்தை 11.9 செக்கன்களில் ஓடி முடித்த வணிக முகாமைத்துவ பீட மாணவன் ஏ.கில்பேர்ட் றிவலும், சிறந்த வீராங்கனையாக 100 மீற்றர் ஓட்டத்தை 15.0 செக்கன்களில் ஓடி முடித்த கலைப்பீட மாணவி எஸ்.ஜெயரஞ்சினியும் தெரிவு செய்யப்பட்டனர்.

மைதான நிகழ்வுகளில் சிறந்த வீரனாக, நீளம் பாய்தல் போட்டியில் 5.93 மீற்றர் தூரம் பாய்ந்த முகாமைத்துவ வணிக பீடத்தை சேர்ந்த எஸ்.பத்மநிதர்சனும், சிறந்த வீராங்கனையாக நீளம் பாய்தலில் 4.11 மீற்றர் தூரம் பாய்ந்த கலைப்பீட மாணவி எஸ்.ஜெயரஞ்சினியும் தெரியு செய்யப்பட்டனர்.

சிறந்த தடகள விளையாட்டு வீரனாக நீளம் பாய்தல் போட்டியில் 5.93 மீற்றர் தூரம் பாய்ந்த முகாமைத்துவ வணிக பீடத்தை சேர்ந்த எஸ்.பத்மநிதர்சன் தெரிவு செய்யப்பட்டார்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் வி.பி.சிவனாந்தன் வெற்றிபெற்ற பீடம் மற்றும் சிறந்த வீர, வீராங்கனைகளுக்காக வெற்றிக்கேடயங்களை வழங்கினார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .