2025 ஜூலை 09, புதன்கிழமை

2014 ஆம் ஆண்டுக்கான சிறந்த அணிகளில் சென்றலைட்ஸ் முதலிடம்

George   / 2014 டிசெம்பர் 29 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}


-குணசேகரன் சுரேன்

யாழ்ப்பாணம் சென்ரல் விளையாட்டுக்கழகத்தால் மேற்கொள்ளப்படும் யாழ். மாவட்ட துடுப்பாட்ட அணிகளை தரப்படுத்தும், ஜோர்ஜ் வெப்ஸ்ரர் தரப்படுத்தலில் 2014ஆம் ஆண்டுக்கான சிறந்த அணியாக 131.04 புள்ளிகளைப் பெற்ற சென்றலைட்ஸ் அணி பெற்றுக்கொண்டுள்ளது.

2014ஆம் ஆண்டுக்கான போட்டிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், அணிகளின் தரவரிசை நிலைமைகளை சென்ரல் விளையாட்டுக்கழகத்தின் தலைவரும் யாழ்ப்பாண துடுப்பாட்டச் சங்க செயலாளருமான எஸ்.விமலதாஸ், திங்கட்கிழமை (29) வெளியிட்டார். இந்த தரவரிசை இருபதுக்கு 20, 30, 40, 50 ஓவர்கள் போட்டிகளை மையமாக வைத்து கணிக்கப்படுகின்றது.

இருபதுக்கு 20 போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 2 புள்ளிகளும், 30 ஓவர்கள் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 3 புள்ளிகளும், 40 ஓவர்கள் போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 4 புள்ளிகளும், 50 ஓவர்கள் கொண்ட போட்டியில் வெற்றிபெறும் அணிக்கு 50 புள்ளிகளும் வழங்கப்படுகின்றது.

இதனைவிட, அணிகள் பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு 10 ஓட்டங்களுக்கும் 0.1 புள்ளிகளும், வீழ்த்தப்படும் ஒவ்வொரு இலக்குக்கு 0.1 புள்ளியும் வழங்கப்பட்டு தரவரிசை கணிக்கப்படுகின்றது.

சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழகம் பங்குபற்றிய 22 போட்டிகளில் 19 போட்டிகளில் வெற்றிபெற்று 131.04 புள்ளிகளுடன் முதலிடத்தையும், கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி பங்குபற்றிய 24 போட்டிகளில் 21 போட்டிகளில் வெற்றிபெற்று 127.47 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும், பற்றீசியன் விளையாட்டுக்கழகம் பங்குபற்றிய 19 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றிபெற்று 85.40 புள்ளிகளுடன் மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டன.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் (72.26), சென்ரல் விளையாட்டுக்கழகம் (69.95), மானிப்பாய் பரிஷ் விளையாட்டுக்கழகம்; (60.82), ஸ்ரீகாமாட்சி விளையாட்டுக்கழகம் (60.76), கிறாஸ்கோப்பர்ஸ் விளையாட்டுக்கழகம் (60.43), யூனியன்ஸ் விளையாட்டுக்கழகம் (47.63), யாழ்ப்பாணம் ஜொனியன்ஸ் விளையாட்டுக்கழகம் (44.65) என்பன அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

2010ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இந்த தரவரிசையில், 2010, 2011ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அணியும், 2012ஆம் ஆண்டு கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியும், 2013ஆம் ஆண்டு ஜொனியன்ஸ் அணியும் சிறந்த அணிகளாக தெரிவு செய்யப்பட்டிருந்தன.

யாழ்ப்பாணத்துக்கு துடுப்பாட்டத்தை 1898ஆம் ஆண்டு காலப்பகுதியில் அறிமுகப்படுத்திய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும் அருட்தந்தையுமான ஜோர்ஜ் வெப்ஸ்ரர் ஞாபகார்த்தமாகவே இந்த தரவரிசை மேறகொள்ளப்படுவதுடன், வருடத்தில் சிறந்த அணிக்கு வெற்றிக்கேடயமும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .