2025 நவம்பர் 19, புதன்கிழமை

மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி

George   / 2015 ஜனவரி 05 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன் 

யாழ். சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனம் வருடாந்தம் நடத்தும் தைப்பொங்கல் தினத்தையொட்டிய மாவட்ட ரீதியிலான மென்பந்து கிரிக்கெட் சுற்றுப்போட்டி 4ஆவது தடவையாக இவ்வருடம் இடம்பெறவுள்ளது.

அணிக்கு 6 பேர் மற்றும் 5 ஒவர்களைக் கொண்ட இந்தச் சுற்றுப்போட்டி எதிர்வரும் சனி (10) மற்றும் ஞாயிறு (11) தினங்களில் மானிப்பாய் செல்லமுத்து மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

தொடர்ந்து, இறுதிப்போட்டி பொங்கல் தினத்தன்று இடம்பெற்று, பரிசளிப்பு விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

இந்தச் சுற்றுப்போட்டியில் கலந்துகொள்ள விரும்பும் கழகங்கள் எதிர்வரும் 7ஆம் திகதிக்கு முன்னர் சண்டிலிப்பாய் பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்துடன், அல்லது 0770869345, 0771641413 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொள்ள முடியும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X