2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

துடுப்பாட்ட பயிற்சி முகாம்

George   / 2015 ஜனவரி 06 , பி.ப. 01:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கதிரவன்


ஸ்ரீ லங்கா கிரிக்கெட்டின் ஏற்பாட்டடில் திருகோணமலை பாடசாலை மாணவர்களுக்கும் கழக வீரர்களுக்கும் துடுப்பாட்டம் தொடர்பான பயிற்சி முகாம் ஒன்றினை செவ்வாய்க்கிழமை ஸ்ரீ கோணுஸ்வரா இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

பயிற்சி முகாமையாளர் சுனில் பெர்ணாண்டோ தலைமையில் மாகாண, மாவட்ட பயிற்றுவிப்பாளர்கள் ஒன்பது பேர் இதில் கலந்து கொண்டு பயிற்சிகளை வழங்கினர்.

16 பாடசாலைகளையும்,  கழகங்களையும் சேர்ந்தவர்கள் இதில் பங்குபற்றினார்கள்.

பிரிதானியா- இலங்கை கிரிக்கெட்  சங்கத்தினால்  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரிக்கும் மாகாண பெண்கள் அணிக்கும் ஒரு இலட்சம் ரூபாய் பெறுதியான  கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.  

திருகோணமலை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் ஒத்துழைப்புடன் இப்பயிற்சி முகாம் நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .