2025 நவம்பர் 19, புதன்கிழமை

12ஆம் கொலனி கதரீனா விளையாட்டுக் கழகம் வெற்றி

Thipaan   / 2015 ஜனவரி 25 , மு.ப. 08:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

நாவிதன்வெளி பிரதேசத்தில் இன ஒற்றுமையை மேம்படுத்தும் நோக்கில் சவளக்கடை பொலிஸார் ஏற்பாடு செய்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் 12ஆம் கொலனி கதரீனா விளையாட்டுக் கழகம் 5 விக்கட்டுக்களால் வெற்றியை தனதாக்கி கொண்டது.

சவளக்கடை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.எம்.எம்.நஜீப் தலைமையில் வேப்பையடி கலைமகள் வித்தியால மைதானத்தில் நேற்று சனிக்கிழமை (24) இப்போட்டி நடைபெற்றது.

அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டியில், 16 கழகங்கள் பங்குபற்றின. இதன் இறுதி சுற்றுக்கு 12ஆம் கொளனி கதரீனா விளையாட்டுக் கழகமும் வீரத்திடல் அல்-அறபா விளையாட்டுக் கழகமும்; தெரிவாகின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற வீரத்திடல் அல்-அறபா விளையாட்டுக் கழகம் முதலில் துடுப்பெடுத்தாட மைதானத்தில் கழமிறங்கி 5 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து 63 ஓட்டங்களை குவித்தனர்.

பதிலுக்கு துடுப்படுத்தாடிய 12ஆம் கொளனி கதரீனா விளையாட்டுக் கழகம் 4.5 ஓவர் நிறைவில் குறித்த இலக்கை அடைந்து 5 விக்கட்டினால் வெற்றி பெற்று சம்பியனாது.

இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.கரன், அன்னமலை, வேப்பையடி வைத்திசாலையின்  வைத்தியர் டாக்டர் திருமதி எஸ்.ஜெ.அனீஸ், தொழில் அதிபர் எம்.வீ.நவாஸ், நாவிதன்வெளி பிரதேச செயலக கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.தேவரஞ்சன், வேப்பயடி கலைமகள் வித்தியால அதிபர் எஸ்.பாலசிங்கன், கிராமசேவக உத்தியோகத்தர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது மக்கள், விளையாட்டு வீரர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X