Thipaan / 2015 ஜனவரி 24 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}

- சொர்ணகுமார் சொரூபன்
விக்ரம்- இராஜன்- கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம் வருடா வருடம் நடாத்தும் துடுப்பாட்ட சுற்றுப்போட்டியின் முதல் ஆட்டத்தில் கே.சி.சி.சி விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஆடிய ஜொலி ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
இச்சுற்றுப்போட்டி கொக்குவில் இந்துக்கல்லூரி மைதானத்தில் சனிக்கிழமை (24) காலை ஆரம்பமானது.
கே.சி.சி.சி விளையாட்டுக் கழகம், ஜொலி ஸ்டார் விளையாட்டுக் கழகம், சென்றலைஸ் விளையாட்டுக் கழகம், யாழ் பல்கலைக்கழக அணி ஆகிய நான்கு அணிகளை உள்ளடக்கி 30 ஓவர்களை கொண்டு இந்த துடுப்பாட்ட சுற்றுப் போட்டி இடம்பெறுகின்றது.
இன்றய முதல் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற ஜொலிஸ்ரார் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. இதற்கு அமைவாக முதலில் துடுப்பெடுத்தாடிய கே.சி.சி.சி அணி 25.1 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 155 ஓட்டங்களைப் பெற்றது.
இதில் அனோஜன் 26 ஓட்டங்களையும், உமாநாத் 24 ஓட்டங்களையும், யனுதாஸ் 18 ஓட்டங்களையும், பார்தீபன் 15 ஓட்டங்களையும், வல்லவகுமாரன் 14 ஓட்டங்களையும் கே.சி.சி.சி அணிக்கு பெற்றுக்கொடுத்தனர்.
ஜொலி ஸ்டார் அணி சார்பாக மதுஷன் 6 ஓவர்கள் பந்து வீசி 30 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுகளையும், அருண் 3 ஓவர்கள் பந்து வீசி 16 ஓட்டங்களை வழங்கி 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 156 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜொலி ஸ்டார் அணி 28.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. இதில் மதுசன் 41 ஓட்டங்களையும், மணிவண்ணன் 24 ஓட்டங்களையும், பகிரதன் ஆட்டமிழக்காமல் 26 ஓட்டங்களையும், உமாதரன் 14 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
கே.சி.சி.சி அணி சார்பாக பவிதரன் 6 ஓவர்கள் பந்து வீசி 13 ஓட்டங்கள் வழங்கி இரண்டு விக்கெட்டுகளையும், சாம்பவன் 6 ஓவர்கள் பந்து வீசி 33 ஓட்டங்கள் வழங்கி 2 விக்கெட்டுக்களையும், யனுதாஸ் 4 ஓவர்கள் பந்து வீ;சி 22 ஓட்டங்கள் வழங்கி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இப்போட்டியின் வெற்றி வாய்பு கே.சி.சி.சி அணி பக்கம் இருந்த போதும் ஆட்டத்தின் இறுதி நேரத்தில் கே.சி.சி.சி அணியினரின் முறை தவறிய பந்து வீச்சு, அகலப்பந்து வீச்சுக்கள் மற்றும் தவறவிடப்பட்ட பிடிகள் என்பனவற்றால் வெற்றி வாய்ப்பு ஜொலிஸ்ரார் அணிக்கு மாறியதை தொடர்ந்து ஜொலி ஸ்டார் அணி துடுப்பாட்ட வீரர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி அணியினை வெற்றிபெற செய்தனர்.
21 minute ago
24 minute ago
30 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
24 minute ago
30 minute ago
36 minute ago