George / 2015 ஜனவரி 26 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில், 19 வயதுப்பிரிவு பிரிவு 3 அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட இரண்டு நாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் ஆட்டமொன்று கடந்த 24ஆம் திகதி சென். மேரிஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இந்தப் போட்டியில், ஆர்.லோகதீஸ்வரன், வி.யதுசன் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சு எஸ்.ஜெனி பிளமினின் துடுப்பாட்டம் கைகொடுக்க சென்.ஜோன்ஸ் கல்லூரி 4 விக்கெட்டுகளால் வடமேல் மாகாண சென்.மேரிஸ் கல்லூரி அணியை வென்றது.
நாணயச் சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய சென்.மேரிஸ் அணி, டபிள்யு றஜிக்க டில்சான் (64), எம்.பெர்ணான்டோ (57) ஆகியோரின் அரைச்சதங்களின் உதவியுடன் முதல் இன்னிங்ஸில் 53.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 209 ஓட்டங்களைப் பெற்றது.
பந்துவீச்சில் சென்.ஜோன்ஸ் சார்பாக வி.யதுசன் 70 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்.ஜோன்ஸ் அணி, எஸ்.ஜெனி பிளமினின் 95 ஓட்டங்களின் உதவியுடன் 57 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து, 214 ஓட்டங்களைப் பெற்றது. ஏ.ஹெரோட் லஸ்கி 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சென்.மேரிஸ் சார்பாக எம்.பாஷித பீரிஷ் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.
5 ஓட்டங்கள் பின்னிலையில் இரண்டாவது இனிங்ஸில்; துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய சென். மேரிஸ் அணி, ஆர்.லோகதீஸ்வரன் (4 விக்கெட்), வி.யதுசன் (4 விக்கெட்டுகள்) ஆகியோரின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல், 41.2 ஓவர்களில் 108 ஓட்டங்களுக்குச் சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
104 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியென்ற இலக்குடன் இரண்டாவது இனிங்ஸை ஆரம்பித்த சென்.ஜோன்ஸ் அணிக்கு, எம்.பாஷித பீரிஷின் பந்துவீச்சு அச்சுறுத்தலாக அமைந்தது. 28.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் பி.துவாரகசீலன் 19 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் சென்.மேரிஸ் சார்பாக எம்.பாஷித பீரிஷ் 3, டில்சான் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago