Thipaan / 2015 ஜனவரி 31 , மு.ப. 08:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

-குணசேகரன் சுரேன்
எஸ்.அலன்ராஜ் அதிரடியாக ஆடி சதம் (103) பெற்றுக்கொடுக்க, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இனிங்ஸ் மற்றும் 109 ஓட்டங்களால் சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரி அணியை வென்றது.
இலங்கை பாடாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் ஏற்பாட்டில் 19 வயதுப்பிரிவு பிரிவு –3 அணிகளுக்கிடையிலான மட்டுப்படுத்தப்படாத ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியின் ஆட்டமொன்று யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் 28ஆம் திகதி நடைபெற்ற போது, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணியை எதிர்த்து ஸ்கந்தவரோதய அணி மோதியது.
நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி, 99.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 306 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் எஸ்.அலன்ராஜ் 103, எஸ்.மதுஷன் 35 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் ஸ்கந்தா சார்பாக, கே.கஜீவன் 4, எம்.சுஜீதரன், ர.சரத்குமார் ஆகியோர் தலா விக்கெட்களை கைப்பற்றினார்கள்.
பதிலுக்கு தமது முதலாவது இனிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்கந்தா அணி, 42.3 ஓவர்களில் 96 ஓட்டங்களுக்குச் சகல இலக்குகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் எம்.சுஜீதரன் 50 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் யாழ்.மத்தி சார்பாக எஸ்.மதுஷன் 60 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்களையும், எஸ்.அலன்ராஜ் 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
பலோஒன் அடிப்படையில் மீண்டும் தமது இரண்டாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய ஸ்கந்தா அணி 48.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் வி.விதுஷந்த் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார்.
பந்துவீச்சில் யாழ்ப்பாணம் மத்திய சார்பாக எம்.மதுஷன் 28 ஓட்;டங்களுக்கு 4 விக்கெட்களையும், ஜே.யரோசன், எஸ்.மதுஷன், எஸ்.அலன்ராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்கள்.

15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago