George / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வி.விஜயவாசகன்
விளையாட்டு போட்டிகளில் வெற்றி, தோல்வி என்பவற்றுக்கு அப்பால் பொறுமை, பண்பு, ஒழுக்கம் என்னும் உயரிய விடயங்களை ஏற்படுத்துவதாக அமைக்கின்றது என யாழ். மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
யாழ். மாவட்ட செயலக நலன்புரிக் கழகத்தால், வருடந்தோறும் நடத்தப்படும் அரச அதிபர் வெற்றிக்கிண்ண விளையாட்டுவிழாவின் 2014ஆம் ஆண்டு விளையாட்டு நிகழ்வில் இறுதிப்போட்டிகளும் பரிசளிப்பு விழா வைபவமும் நலன்புரிக்கழகத் தலைவி றஞ்சினி மோகனேஸ்வரன் தலைமையில் மட்டுவில் வளர்மதி விளையாட்டுக்கழக மைதானத்தில் சனிக்கிழமை(31) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு மாவட்டச் செயலாளர் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், தினம் தினம் கோப்புகளுடனும் மக்கள் சேவையுடனும் தம்மை இணைத்து சேவையாற்றி மனதாலும், உடலாலும் சோர்ந்து போயுள்ள அரச உத்தியோகத்தர்கள், அவற்றிலிருந்து சிறிது விடுபட்டு உள்ளத்துக்கும், உடலுக்கும் உற்சாகம் ஊட்டக்கூடியதாக இந்த அரச அதிபர் வெற்றிக்கிண்ணகம் அமைந்துள்ளது.
இழந்த உற்சாகத்தைப் பெற்று புத்தாக்கம் பெற இவ்வகையான விளையாட்டுப் போட்டிகள் உதவும். வௌ;வேறு பிரதேசத்தை சேர்ந்த உத்தியோகத்தர்கள் இங்கு ஒன்றுகூடி சந்தோசமாக உரையாடி, தங்கள் உறவை வளர்த்துக் கொள்ளக்கூடிய களமாக இவ்விழாக்கள் உள்ளன.
எல்லோரும் ஒன்றுகூடி உற்சாகமாக விளையாடடில் பங்குபற்றி தத்தமது திறமைகளை வெளிக்காட்டி இருந்தார்கள் என்றார்.
மேலதி மாவட்டச் செயலாளர் திருமதி ரூபினி வரதலிங்கம் உரையாற்றுகையில், விளையாட்டுப் போட்டிகளுடன் மட்டும் நின்றுவிடாது, எமது பாரம்பரியத்தை பிரதிபலிக்கக் கூடிய விதத்தில் பாரம்பரிய போட்டிகளும் நடத்தப்பட வேண்டும் என்றார்.
மாவட்டச் செயலாளர் வெற்றிக்கிண்ணத்தில் 37 புள்ளிகள் பெற்ற தெல்லிப்பழை பிரதேச செயலக அணியினர் 2014ஆம் ஆண்டுக்கான சம்பியனாகத் தெரிவுசெய்யப்பட்டனர்.
இரண்டாமிடத்தை 35 புள்ளிகள் பெற்ற வேலணைப் பிரதேச செயலக அணியினரும், மூன்றாமிடத்தை 30 புள்ளிகள் பெற்ற யாழ்.எமாவட்ட செயலக அணியினரும் பெற்றுக்கொண்டனர்.
10 minute ago
11 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
11 minute ago
30 minute ago