2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இறுதி போட்டியில் களமிறங்கும் சென்றலைட்ஸ் vs ஜொலி ஸ்டார்ஸ்

George   / 2015 பெப்ரவரி 02 , பி.ப. 10:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்

விக்ரம் - இராஜன் - கங்கு ஞாபகார்த்தமாக கொக்குவில் வளர்மதி சனசமூக நிலையம், வருடாந்தம் நடத்தும் கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் போட்டியொன்றில் பி.வதூஸனனின் துல்லியமான பந்துவீச்சால் வெற்றிபெற்ற சென்றலைட்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது. 


30 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட இந்த சுற்றுப்போட்டியின் போட்டிகள், கொக்குவில் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
 
ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்ற ஆட்டத்தில் சென்றலைட்ஸ் அணியை எதிர்த்து கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி மோதியது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று, முதலில் துடுப்பெடுத்தாடிய கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணி, 27 ஓவர்களில் 78 ஓட்டங்களை மாத்திரம் பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் ஏ.ஜெயரூபன் 18, எல்.ஆதித்தன் 14 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் சென்றலைட்ஸ் அணி சார்பாக, பி.வதூஸனன் 6 ஓவர்கள் பந்துவீசி 16 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், கே.கோகுலன், ஜே.ஜெரிக்துஸான், எ.டர்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்.

79 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாட களமிறங்கிய சென்றலைட்ஸ் அணி, மிகுந்த போராட்டத்தின் மத்தியில் 22.1 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் எ.டர்வின் 15 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் கொக்குவில் அணி சார்பாக எஸ்.தரிதரன் 6 ஓவர்கள் பந்துவீச்சி 11 ஓட்டங்களை கொடுத்து 4 விக்கெட்டுக்களையும், பி.பார்த்தீபன் 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினார்கள்.

இந்த வெற்றி மூலம் சென்றலைட்ஸ் அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று, ஏற்கெனவே இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள ஜொலி ஸ்டார்ஸ் அணியுடன் எதிர்வரும் 7ஆம் திகதி நடைபெறும் இறுதிப்போட்டியில் மோதவுள்ளது.

இறுதிப்போட்டி 40 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .