Kogilavani / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 06:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.குகன்
'மாணவர்கள் மத்தியில் கல்வியுடன் இணைந்து விளையாட்டுத்துறையும் வளர்த்தெடுக்கவேண்டியது நவீன கல்வியுலகில் அவசியமானதாக விளங்குகின்றது' என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலன்ரின் தெரிவித்தார்.
யாழ். ஏழாலை சிறிமுருகன் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டி, வித்தியாலய அதிபர் க.சந்திரகுமார் தலைமையில் வித்தியாலய மைதானத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார். இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
சிறுபராயத்தில் மாணவர்களாக பாடசாலைகளில் எல்லோரும் இணைக்கப்படுகின்றார்கள். அவர்களின் வளர்ச்சி பரிணாமங்களில் நல்லொழுக்கம், கல்வியறிவு, தலைமைத்துவம், இணைப்பாடவிதான செயற்பாடுகள் என்பவை போதிக்கப்பட வேண்டும்.
இன்றையய சமகால சூழலில் சில இளைய சமுதாயம் நவீன கலாசாரம் எனும் போர்வையில் சமூகம் ஏற்காத பாதைகளில் பயணிக்கின்றனர்.
நாளைய நமது தேசம் இன்றைய இளையோரின் கரங்களில் என்பதனை நன்கு உணர்ந்து நாளைய தேசம் பிரகாசிக்க தமக்கு தேவையான விடயங்களை உள்வாங்கி தேவையற்றவையை விலக்கி தம்மை தாமே முத்துக்களாக பிரகாசிக்க முயற்சிகள் எடுக்க வேண்டும்.
எமது பாரம்பரியம் மிக்க மண்ணின் மைந்தர்கள் ஆகிய யாழ்.குடாநாட்டு மாணவர்கள் தேசிய மட்டங்களில் பல்வகையான பதக்கங்களை வென்றெடுக்க வேண்டும்' என்றார்.
15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
18 minute ago
24 minute ago
30 minute ago