2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

யாழ். இந்துக் கல்லூரி மாணவர்களின் வீதியோட்டம்

George   / 2015 பெப்ரவரி 09 , பி.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குகன்

யாழ்ப்பாணம்  இந்து கல்லூரியின் 2015ஆம் ஆண்டுக்குரிய இல்ல மெய்வல்லுநர் போட்டியின் பிரதான நிகழ்வான வீதியோட்டம் வெள்ளிக்கிழமை(06) நடைபெற்றது. 

இந்நிகழ்வு இளநிலைப் பிரிவு முதுநிலைப் பிரிவு எனும் இரு பிரிவுகளாக நடைபெற்றது. இப் போட்டிக்கு இரு பிரிவுகளிலிருந்தும் சுமார் 250 மாணவர்கள் பங்குபற்றினர்.

வீதியோட்டத்தை யாழ். இந்துக் கல்லூரியின் பழைய மாணவன் சண்.தயாளன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார்.
இப்போட்டியில் இளநிலைப்பிரிவில் முதலாமிடத்தை வி.சஜீவன் இரண்டாமிடத்தை நி.ஆதவன், மூன்றாமிடத்தை ந.பானுஜன் ஆகியோர் பெற்றுக்கொணடனர்.

முதுநிலைப்பிரிவில்  முதலாமிடத்தை  எஸ்.சுபராஜ் இரண்டாமிடத்தை எஸ்.ஜெசிந்தன் மூன்றாமிடத்தை தோ.நிரோஜன் ஆகியோரும் பெற்றுக்கொண்டார்கள்.

அத்துடன் இம்முறை கலந்து கொண்ட அனைத்து மாணவர்களும் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்துக்கு அமைய மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .