George / 2015 பெப்ரவரி 10 , பி.ப. 02:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எல்.லாபீர்
நாவாந்துறை பிரதேசம் விளையாட்டுத்துறையில் பிரபல்யம் அடைந்த கிராமமாக மிளிர்கின்றது. விளையாட்டை அறிவியல் துறையாக மாற்றி விளையாட்டுத்துறை மேம்படுத்தப்படவேண்டும் என யாழ். மறை மாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை தெரிவித்தார்.
யாழ். நாவாந்துறை றோமன் கத்தோலிக்க பாடசாலையின் மெய்வன்மை விருது வழங்கும் விழா, பாடசாலை அதிபர் எவ்.எக்ஸ்.அன்டன் தலைமையில் செவ்வாய்க்கிழமை(10) நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கூறுகையில், இந்தப் பாடசாலையின் சிறிய மண்டபத்தில் மிகப்பெரிய விழா நடைபெறுகின்றது.
அனைத்து மாணவர்களும் பங்குபற்ற முடியாத நிலை காணப்படுகின்றது. இரண்டு பெரிய கோவில்களை கட்டி முடித்துள்ள நாவாந்துறை மக்களுக்கு இந்தக் கல்லூரிக்கான 3 மாடிக்கட்டடத்தை நிர்மாணிப்பதில் எவ்வித கஸ்டங்களுமில்லை. அடுத்த வருடம் 3 மாடிக்கட்டடத்தில் இந்நிகழ்வு நடைபெறவேண்டும் என்றார்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பொன்.பாலசுந்தரம்பிள்ளை உரையாற்றுகையில்,
50 வயதிலும் படிக்கலாம். ஆனால் பாடசாலைக்கு செல்லமுடியாது. பாடசாலைக்கு தினமும் மாணவர்கள் வருகை தந்து பாடங்களில் கவனம் எடுக்கவேண்டும்.
இந்த விடயத்தில் பெற்றோரின் பங்கு அவசியமானதாகும். நாவாந்துறை பாடசாலையில் 2 விஞ்ஞான பட்டதாரிகள் கற்பிப்பது வரப்பிரசாதமாகும் என்றார்.
பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டியவர்களுக்கான பரிசில்கள், இதன் போது வழங்கப்பட்டன.
8 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
28 minute ago