2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

மர்வா இல்லம் வெற்றி

Kogilavani   / 2015 பெப்ரவரி 12 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்


புத்தளம், திகழி முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இவ்வருட இல்ல விளையாட்டுப் போட்டியின் இறுதி நாள் நிகழ்வுகள் செவ்வாய்க்கிழமை (10) மாலை பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.ஜமால்டீன் தலைமையில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.


நடைபெற்ற போட்டிகளில் புள்ளிகள் அடிப்டையில் மர்வா இல்லம் 347 புள்ளிளைப் பெற்று சம்பியன்  கிண்ணத்தைப் சுவீகரித்தது. அரபா இல்லம் 311 புள்ளிளைப்பெற்று இரண்டாம் இடத்தையும் சபா இல்லம் 285 புள்ளிளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.


வெற்றிபெற்ற மாணவர்கள் வெற்றிக் கிண்ணங்கள், பதக்கங்கள், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டதோடு இல்லப் பொறுப்பாசிரியர்களும் வெற்றிக் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந்நிகழ்வில் வடமேல் மாகாண சபை உறுப்பினர் என்.டி.எம்.தாஹிர முன்னாள் கல்பிட்டிப் பிதேச சபை உறுப்பினர் எஸ்.பீ.எம்.இஸ்ஸதீன், புத்தளம் வலயக்கல்விப் பணிப்பாளர் டபிள்யூ.பீ.எஸ்.கே. விஜேசிங்க, புத்தளம் வலய உதவிக் கல்விப் பணிப்பாளர் (தமிழ்ப் பிரிவு) இசட்.ஏ.ஸன்ஹிர், கல்பிட்டிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.அனீஸ், முன்னாள் கல்பிட்டிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.நூஹ்லெப்பை மற்றும் பாடசலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .