2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

இராணுவ விளையாட்டு போட்டி

George   / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 08:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லலைத்தீவு மாவட்ட இராணுவ தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ வீரர்களுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள், ஞாயிற்றுக்கிழமை(15) ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றன. 

முல்லைத்தீவு மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் டயஸ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மூன்று படைப்பிரிவுகளின் கீழ் இயங்கும் 28 படையணிகளின் இராணுவ வீரர்கள் கலந்துகொண்டனர். 

இந்த விளையாட்டுப் போட்டிகளில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள விளையாட்டுக் கழகங்களுக்கும் எட்டு பாடசாலைகளின் மாணவர்களுக்கும் இடையிலான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. 

அத்துடன், இராணுவ வீரர்களின் உடற்பயிற்சி அணிவகுப்பு, பேன்ட் வாத்திய இசைத்தல் என்பன இடம்பெற்றதுடன், அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றது. 

போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற இராணுவ வீரர்களுக்கும் விளையாட்டுக் கழகங்களுக்கும் பாடசாலை மாணவர்களுக்கும் இராணுவ உயர் அதிகாரிகளினால் பதக்கங்கள் அணிவிக்கப்பட்டு, சான்றிதழ்களும், கிண்ணங்களும், பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன. 

இந்த நிகழ்வில் நான்காயிரத்திற்கும் அதிகமான இராணுவ வீரர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .