George / 2015 பெப்ரவரி 16 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்
2013 - 2014ஆம் ஆண்டுக்கான, கிழக்கு மாகாண வர்ண விருது வழங்கல் நிகழ்வு வெள்ளிக்கிழமை (13) மாலை மட்டக்களப்பு மாநகர சபை மண்டபத்தில் மாகாண விளையாட்டுப் பணிப்பாளர் என். மணிவண்ணன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டுத்துறை அமைச்சின் உதவி செயலாளர் எம்.ஐ.பிர்ணாஸ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டதுடன், மாவட்ட விளையாட்டு உத்தியோகத்தர்கள், பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோரும் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.
இதில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய ரீதியில் 2013ஆம் 2014 ஆம் ஆண்டு கபடி, கிரிக்கெட், மல்யுத்தம், குத்து சண்டை கூடைப்பந்து கராத்தே ஆகிய போட்டிகளில் பதக்கம் வென்ற வீர, வீராங்களைகள் கௌரவிக்கப்பட்டனர்.
அத்துடன், மாகாணத்தில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற பாடசாலை வீரர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
தேசிய ரீதியில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கப்பட்டன.
தங்கம் வென்றவர்களுக்கு 20,000 ரூபாயும், வெள்ளி வென்றவர்களுக்கு 15,000 ரூபாயும், வெண்கலம் வென்றவர்களுக்கு 12,500 ரூபாயும் வழங்கப்பட்டன. அத்துடன், விளையாட்டு உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
தேசிய ரீதியில் வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளை பயிற்றுவித்த பயிற்றுனர்களுக்கும் இதன்போது, பரிசில்கள் வழங்கப்பட்டதுடன் கௌரவிப்பும் வழங்கப்பட்டது.
அம்பாறை மாவட்டத்துக்கான கௌரவிப்பு நிகழ்வு, வெள்ளிக்கிழமை காலை சம்மாந்துறை விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் நடைபெற்றது.
19ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்துக்கான கௌரவிப்பு நிகழ்வு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
11 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
1 hours ago