2025 நவம்பர் 19, புதன்கிழமை

தேசிய மட்ட போட்டிகளில் பதக்கம்

Sudharshini   / 2015 பெப்ரவரி 19 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.சசிக்குமார்

கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் 2013 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில், தேசிய மட்டத்தில்  பதக்கங்களை பெற்ற திருகோணமலை மாவட்ட வீர, வீராங்கனைகளை கௌரவித்து விருது வழங்கும் நிகழ்வு வியாழக்கிழமை (19) கிழக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.  

இந்நிகழ்வில்  மாவட்டத்தின் சார்பில் பதக்கங்களை வெற்ற 19 வீர, வீராங்கனைகளுக்கும் பாடசாலை மட்ட போட்டியில் பதக்கம் வென்ற 5 பாடசாலை மாணவர்களும் விருதுகள் வழங்கி வைக்கப்பட்டன.

கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்த்தன, கிழக்கு மாகாண சுகாதார விளையாட்டு அமைச்சின் செயலாளர் எஸ்.கருணாகரன், பிரதி பிரதம செயலாளர் எஸ்.மகேந்திரராஜா, விளையாட்டு அமைச்சு உதவிச் செயலாளர் குசைன்தீன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X