2025 ஜூலை 09, புதன்கிழமை

மீராபாலிகா தேசியபாடசாலை முதல் தர பாடசாலையாக மாற்றப்படும்: ஹிஸ்புல்லாஹ்

Gavitha   / 2015 பெப்ரவரி 21 , மு.ப. 04:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடி மீராபாலிகா தேசியபாடசாலை கிழக்கு மாகாணத்தின் முதல் தர பெண்கள் கல்லூரியாக சகல வளங்களையும் கொண்டதாக மாற்றப்படும் என்று முன்னாள் பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

காத்தான்குடி மீராபாலிகா தேசிய பாடசாலையில் வெள்ளிக்கிழமை (20)  நடைபெற்ற வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.ஏ.சத்தார் தலைமையில் நடைபெற்ற இந்த விளையாட்டு போட்டியில், தொடர்ந்து உரையாற்றிய அவர், 'கடந்த அரசாங்கத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் இந்தப் பாடசாலையில் 4 மாடிகளைக் கொண்ட இரு கட்டடங்கள் நிர்மாணிக்கப்படவுள்ளது' என்று தெரிவித்தார்.

10 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட அதிபர் அலுவலகத்தையும் இதன்போது பிரதியமைச்சர் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில், மட்டக்களப்பு மத்திவலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமதுலெப்பை பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.எம். இஸ்மாலெப்பை பிரதேசக் கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். பதுர்தீன் உட்படகல்வி அதிகாரிகள் அதிபர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .