2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

லோரன்ஸ் இல்லம் முதலாமிடம்

Kogilavani   / 2015 பெப்ரவரி 27 , மு.ப. 06:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மொஹொமட் ஆஸிக்


கண்டி, பெண்கள் உயர் கல்லூரியின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியில் லோரன்ஸ் இல்லம் 502 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பெற்றுகொண்டது.


இரண்டாம் இடத்தை 501 புள்ளிகளை பெற்று லண்டன் இல்லமும் மூன்றாம் இடத்தை 496 புள்ளிகளை பெற்று செம்சன் இல்லமும் நான்காம் இடத்தை 484 புள்ளிகளை பெற்று நான்காம் இடத்தையும் பெற்றுகொண்டன.


கண்டி, பெண்கள் உயர் கல்லூரியின் 136 வது வருட இல்ல விளையாட்டுப் போட்டி (26.2.2015) கண்டி போகம்பறை மைதானத்தில் கல்லூரியின் அதிபர் திருமதி மல்காந்தி அபேகுணசேக்கர தலைமையில் இடம்பெற்றது.


கல்லூரியின் பழைய மாணவியும் முன்னாள் மாவட்ட நீதிபதியின் செயலாளரும், ஊடகவியலாளருமான திருமதி ரோஸ்மேரி மூனமலே வீரரத்ன உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர்.


போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .