George / 2015 மார்ச் 02 , பி.ப. 05:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் லிவர்பூல் கால்பந்தாட்ட கழகம், மீண்டும் தனது திறமையை நிலைநாட்டியதன் மூலம் புத்தளம் பிராந்திய சம்பியனாக மகுடம் சூடியுள்ளது.
இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தினால் நடாத்தப்பட்டு வரும் எப்.ஏ. கிண்ணத்துக்கான, புத்தளம் பிராந்தியத்துக்குரிய கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி, சனிக்கிழமை (28) மாலை இடம்பெற்றது.
இரு சுற்றுகளில் வெற்றிகளை பெற்ற, பலம் வாய்ந்த அணிகளான புத்தளம் லிவர்பூல் மற்றும் கல்பிட்டி பேர்ல்ஸ் அணிகள் இறுதி ஆட்டத்தில் களமிறங்கின.
போட்டி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து நிறைவு பெறும் இறுதி நிமிடம் வரைக்கும் விறுவிறுப்பாக நடைபெற்றதுடன் முதல் பாதியில் கல்பிட்டி பேர்ல்ஸ் அணி இரு கோல்களையும் லிவர்பூல் அணி ஒரு கோலினையும் பெற்றிருந்தன.
எனினும் இரண்டாவது பாதியில் லிவர்பூலுக்கு கிடைக்கப்பெற்ற தண்ட உதையை கோலாக்கிய லிவர்பூல் அணியினர் அதே வேகத்தில் மற்றுமொரு கோலினையும் போட்டதால்; லிவர்பூல் அணி 03 : 02 கோல்களினால் வெற்றி பெற்று பிராந்திய சாம்பியனாக தெரிவானது.
லிவர்பூல் அணிக்காக எம்.ஐ.எம். அலி, எம்.சகீர், எம்.தஸ்னீம் ஆகியோர் கோல்களை பெற்றுக்கொடுத்தனர்.
போட்டியின் நடுவர்களாக இலங்கை கால்பந்தாட்ட சம்மேளன நடுவர்களான அநுராதபுரத்தை சேர்ந்த டபிள்யூ.ஏ.நளின் ஸ்ரீநாத், கே.டீ.ஷான் குமார, எம்.ஏ.ஆர்.என்.மாரசிங்க ஆகியோர் கடமையாற்றினர்.
15 minute ago
19 minute ago
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
46 minute ago
3 hours ago