2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

வடக்கின் மாபெரும் போர்: சென்.ஜோன்ஸ் துடுப்பாட்டம்

Menaka Mookandi   / 2015 மார்ச் 05 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன், நா.நவரத்தினராசா

வடக்கின் மாபெரும் போர் என வர்ணிக்கப்படும் சென்.ஜோன்ஸ் கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது கிரிக்கெட் போட்டி யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வியாழக்கிழமை (05) காலை 10 மணிக்கு ஆரம்பமாகியது.

3 நாட்கள் கொண்ட இந்த பெரும் கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு நாளும் 90 ஓவர்கள் வீசப்படவேண்டும் என்ற நியதியுடன், ஒருநாளில் மூன்று பிரிவுகளாக போட்டி இடம்பெற்று வருகின்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணித்தலைவர் பத்திநாதன் நிரோஜன் தமது அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடவுள்ளதாக முடிவெடுத்தார். அதற்கிணங்க சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடி  வருகின்றது.

11 மணி வரையில் 12 ஓவர்கள் ஒரு விக்கெட்டை இழந்து 24 ஓட்;டங்களைப் பெற்று சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி துடுப்பெடுத்தாடி வருகின்றது. மணிவண்ணன் சிந்துர்ஜன் 2 ஓட்டங்களுடன், கணேசலிங்கம் நிதுசனின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.  களத்தில் அணித்தலைவர் சஜீந்திரன் கபில்ராஜ் 9, செபமாலைப்பிள்ளை ஜெனிபிளமிங் 4 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றனர்.

இதுவரையில் நடைபெற்ற போட்டிகளில் சென்.ஜோன்ஸ் கல்லூரி 34 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 27 போட்டிகளிலும் வெற்றிபெற்றன. 39 போட்டிகள் சமநிலையிலும், 7 போட்டிகளின் முடிவுகள் தெரியாத நிலையிலும், 1 போட்டி கைவிடப்பட்டும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .