Gavitha / 2015 மார்ச் 16 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மொஹமட் ஆஸிக்
முதற்தர கழகங்களுக்கிடையிலான றகர் லீக் போட்டி தொடரில் சம்பியனாக தெரிவான கண்டி விளையாட்டு கழகம், டயலொக் கிண்ணத்தை சுவீகரித்து கொண்டது.
கண்டி நித்தவலை மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை(15) இடம்பெற்ற நிகழ்வில் வைத்து கண்டி விளையாட்டு கழகத்துக்கு வெற்றிக்கிண்ணம் வழங்கப்பட்டது.
முன்னதாக கண்டி விளையாட்டு கழகத்துக்கும் கடற்படை அணிக்கும் இடையில் நடைபெற்ற, ரகர் லீக் தொடரின் இறுதிப்போட்டியில் 12 - 11 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் கடற்படை அணி வெற்றிபெற்றது.
எனினும் போட்டித்தொடரில் அணிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகளின் அடிப்படையில் கண்டி விளையாட்டுக் கழகம் சம்பியனாக தெரிவானது.
போட்டித் தொடரில் கண்டி அணி, மொத்தமாக 218 புள்ளிகளையும் கடற் படை அணி, 216 புள்ளிகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .