Thipaan / 2015 மார்ச் 22 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா
வலிகாமம் கல்வி வலயப் பாடசாலை அணிகளுக்கு இடையே நடைபெற்ற 15 வயதுப் பிரிவினருக்கான வலைப்பந்தாட்டப் போட்டியில் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, வலய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
கடுமையான போட்டியைத் தொடர்ந்து கிடைத்த மேலதிக நேரத்தை உரிய முறையில் பயன்படுத்திய தெல்லிப்பழை யூனியன் கல்லூரி, 15 வயதுப் பிரிவு வலைப்பந்தாட்ட அணி, வலய சம்பியனயாக தெரிவு செய்யப்பட்டது.
அராலி சரஸ்வதி மகா வித்தியாலய மைதானத்தில் வெள்ளிக்கிழமை (20) பிற்பகல் இடம்பெற்ற இறுதிப் போட்டியில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயமும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியும் மோதிக்கொண்டன.
முதல் பாதி ஆட்டத்தில் கடும் போராட்டத்தின் மத்தியில் அராலி சரஸ்வதி மகாவித்தியாலயம் 06:05 புள்ளிகள் என்ற முன்னிலையில் ஆட்டம் முடிவடைந்தது.
இரண்டாம் பாதி ஆட்டத்தில் மீண்டும் இரு அணிகளும் தமது பலப் பரீட்சையை காட்டத் தொடங்கின. ஆனாலும் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி 06:05 புள்ளிகள் என்ற முன்னிலையில் ஆட்டம் முடிவடைந்தமையால் இரு அணிகளும் தலா 11 புள்ளிகள் என்ற சம நிலையில் காணப்பட்டன.
வெற்றி தோல்வியை தீர்மானிக்க வழங்கப்பட்ட மேலதிக நேரத்தை யூனியன் கல்லூரி உரிய முறையில் பயன்படுத்தி மீண்டும் 05:01 என்ற புள்ளிகள் அடிப்படையில் முடிவடைந்தது.
ஆட்ட நிறைவில் யூனியன் கல்லூரி 16:12 புள்ளிகள் என்ற அடிப்படையில் அராலி சரஸ்வதி மகா வித்தியாலயத்தை வெற்றி பெற்று வலய சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

23 minute ago
27 minute ago
54 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
27 minute ago
54 minute ago
3 hours ago