Thipaan / 2015 ஏப்ரல் 05 , மு.ப. 09:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் போல்டன் அணிக்கும் புத்தளம் நியூ ஸ்டார்ஸ் அணிக்குமிடையில் நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டியில் இரு அணிகளும் தலா ஒவ்வொரு கோல்களை பெற்றுக்கொண்டதால் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.
புத்தளம் கால்பந்தாட்ட லீக் நடாத்தும் புள்ளிகள் அடிப்படையிலான கால்ப்பந்தாட்ட தொடருக்கான இவ் ஆட்டமானது புத்தளம் சாகிரா தேசிய கல்லூரி மைதானத்தில் வெள்ளிக்கிழமை (03) மாலை இடம்பெற்றது.
நியூ ஸ்டார்ஸ் அணிக்காக எம்.என்.எம். சர்பான் ஒரு கோலினையும் போல்டன் அணிக்காக எம். இஹ்திசாம் ஒரு கோலினையும் பெற்றனர். இதன் மூலம் இரு அணிகளும் தலா ஒவ்வொரு புள்ளியை பெற்றுக்கொண்டன.
போட்டிக்கு நடுவர்களாக எம்.ஓ. எம். ஜாகீர், எம்.எஸ்.எம். நௌபி, ஏ.ஏ.எம். கியாஸ் ஆகியோர் கடமையாற்றினர்.

25 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
34 minute ago
2 hours ago
2 hours ago