2025 ஜூலை 17, வியாழக்கிழமை

27வது சுப்பர் லீக் கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபை சம்பியன்

Kogilavani   / 2011 டிசெம்பர் 31 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(கிரிசன்)

இலங்கை தேசிய இளைஞர்கள் மன்றத்தின 27வது சுப்பர் லீக் கரப்பந்தாட்ட போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபை சம்பியன் கிண்ணத்தை பெற்றுக் கொண்டது.

மாத்தறை றுகுனு பல்கலைக்கழக உள்ளக கரப்பந்தாட்ட மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் இலங்கை துறைமுக அதிகார சபையும் இலங்கை இராணுவ அணியும் மோதிக்கொண்டன.

ஐந்து சுற்றுக்கள் கொண்ட இப் போட்டியில் முதல் மூன்ற நேர் சுற்றுக்களை துறைமுக அதிகார சபை வெற்றி பெற்று சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.

முதல் மூன்று சுற்றுக்களிலும் துறைமுக அதிகார சபை அணி 25:23, 25:23 24:26 புள்ளிகள் என்ற அடிப்படையில் இலங்கை இராணுவ அணியை வெற்றி பெற்று ஆறாவது தடவையாக சம்பியன் கிண்ணத்தை தட்டிக்கொண்டது.

கடந்த போட்டிகளில் இலங்கை இராணுவ அணி இரண்டு தடவைகள் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X