2025 நவம்பர் 19, புதன்கிழமை

4 விக்கெட்களால் ஹாட்லி பழைய மாணவர் அணி வெற்றி

George   / 2015 ஜனவரி 12 , மு.ப. 05:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வி.விஜயவாசகன் 


சாவகச்சேரி றிபேக் தாரகை மற்றும் ஹாட்லி கல்லூரி பழைய மாணவர் அணி என்பன மோதிக்கொண்ட சிநேகபூர்வ 50 ஓவர்கள் கொண்ட கிரிக்கெட் போட்டியில் ஹாட்லி பழைய மாணவர்  அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. 

இந்த போட்டி ஞாயிற்றுக்கிழமை(11) ஹாட்லி கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது.

நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய றிபேக் தாரகை அணி, 46.4 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் என்.நிலான் 31, எஸ்.பிரதாபன் 38, கே.ஹரிகரன் 30, எம்.லக்ஸன் 32 ஓட்டங்களைப் பெற்றனர்.

231 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஹாட்லி அணி, 44.5   ஒவர்களில் 7  விக்கெட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது. துடுப்பாட்டத்தில் என்.ஹரி 73 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுத்தார் 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X