2025 நவம்பர் 02, ஞாயிற்றுக்கிழமை

5 பதக்கங்களை வென்ற திருகோணமலை மாவட்டம்

Shanmugan Murugavel   / 2025 செப்டெம்பர் 16 , பி.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- அ. அச்சுதன்

அகில இலங்கை பாடசாலை எடை தூக்குதல் சம்பியன்ஷிப்பானது பொலன்னறுவையில் சனிக்கிழமை (13) நடைபெற்றபோது ஐந்து பதக்கங்கங்களை திருகோணமலை  மாவட்ட அணி தனதாக்கிக் கொண்டுள்ளது.

இதில், 17 வயதுக்குட்பட்ட 81 கிலோ கிராம் பிரிவில் ஹரினியும், 20 வயதுக்குட்பட்ட 59 கிலோ கிராம் பிரிவில் கிஷோதிகாவும் தங்கப் பதக்கங்களைப் பெற்றனர். இவர்களிருவரும் ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரி மாணவிகளாவர்.

17 வயதுக்குட்பட்ட 71 கிலோ கிராம் பிரிவில் விவேகானந்தா கல்லூரியின் கோபிகா வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

17 வயதுக்குட்பட்ட 49 கிலோ கிராம் பிரிவில் விவேகானந்தா கல்லூரியின் சுகல்யாவும், 20 வயதுக்குட்பட்ட 64 கிலோ கிராம் பிரிவில் மல்லிகைத்தீவு மகா வித்தியாலய யோமிஷாவும் வெண்கலப் பதக்கங்களைப் பெற்றனர்.

சிரேட்ட பயிற்சியாளர் உமாசுதனின் நெறிமுறைப்படுத்தப்பட்ட பயிற்சிகளினால் திருகோணமலை  மாவட்ட மாணவியரின் திறமைகள் ஆண்டுகள் தோறும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X